ADDED : ஜூன் 13, 2026 03:38 AM
அ நிறம் | அளவு
குளித்தலை:குளித்தலை
அடுத்த மேட்டுமகாதானபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி, 61,
விவசாய கூலி தொழிலாளி. இவரது மகன் கார்த்திக், 35, பெயின்டர்.
கடந்த
7ம் தேதி மாலை, 4:00 மணியளவில் வீட்டில் இருந்த கார்த்திக்கை
காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்தவித தகவலும்
கிடைக்கவில்லை. தனது மகனை காணவில்லை என, தந்தை கொடுத்த புகார்படி
லாலாபேட்டை போலீசார் தேடி வருகின்றனர்.
