/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கூலி தொழிலாளி மகன் நீட் தேர்வில் 'பாஸ்'
/
கூலி தொழிலாளி மகன் நீட் தேர்வில் 'பாஸ்'
ADDED : ஜூலை 26, 2025 01:21 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த, வைகைநல்லுார் பஞ்.,கோட்டமேடு மேலத்தெருவை சேர்ந்தவர் கூலி தொழிலாளிகள் தனசேகரன் ஜெகதீஸ்வரி. இவர்களது மகன் செந்தில்வேல்குமரன். இவர் குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிப்பை 2024ம் ஆண்டு முடித்தார். அப்போது இவர், 465 மதிப்பெண்கள் பெற்றார். பின், திருச்சியில் உள்ள தனியார் நீட் சென்டரில் படித்து வந்தார்.
முதல் முயற்சியிலேயே இவர் நீட் தேர்வில், 533 மதிப்பெண்கள் பெற்றார். அரசு பள்ளியில் படித்ததால், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் திருச்சி அரசு மருத்துவக் கல்லுாரியில் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
என்னை ஊக்கப்படுத்திய பெற்றோர், அக்கா, அண்ணன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், தனியார் சென்டர் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தமிழக அரசுக்கு நன்றி என மாணவர் செந்தில்வேல் குமரன் கூறினார்.