/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தொடர் மழையால் நல்ல விளைச்சல் விற்பனைக்கு குவிந்த செங்கரும்பு
/
தொடர் மழையால் நல்ல விளைச்சல் விற்பனைக்கு குவிந்த செங்கரும்பு
தொடர் மழையால் நல்ல விளைச்சல் விற்பனைக்கு குவிந்த செங்கரும்பு
தொடர் மழையால் நல்ல விளைச்சல் விற்பனைக்கு குவிந்த செங்கரும்பு
ADDED : டிச 10, 2024 01:49 AM
தொடர் மழையால் நல்ல விளைச்சல்
விற்பனைக்கு குவிந்த செங்கரும்பு
கரூர், டிச. 10-
பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், தொடர்மழை காரணமாக, நல்ல விளைச்சல் கண்டுள்ள செங்கரும்பை, கரூரில் விற்பனைக்காக குவித்துள்ளனர்.
தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் திருநாள், வரும் ஜனவரி, 14 ல் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், கரும்பு, மஞ்சள் கொத்து வைத்து வழிபடுவது வழக்கம். பொங்கல் பண்டிகை விற்பனைக்காக செங்கரும்பை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். தொடர் மழை காரணமாக செங்கரும்பு நல்ல விளைச்சல் கண்டுள்ளது. விவசாயிகள் செங்கரும்பை அறுவடை செய்து, தற்போது விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். நேற்று கரூர் அருகே, வெங்கமேட்டில், செங்கரும்பு விற்பனைக்காக குவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து, கரும்பு வியாபாரிகள் கூறியதாவது:
வழக்கமாக பொங்கல் பண்டிகைக்கு, ஒரு வாரம் முன்புதான், செங்கரும்பு அறுவடை செய்யப்படும். நடப்பாண்டு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல், மழை பெய்து வருகிறது.
இதனால், நாமக்கல் மாவட்டம், கொல்லி மலை, திருச்சி, ஈரோடு பகுதிகளில் செங்கரும்பு எதிர்பார்த்ததை விட நன்கு விளைச்சல் கண்டுள்ளது. இதனால், பொங்கல் பண்டிகைக்கு இன்னும், ஒரு மாதம் உள்ள நிலையில், விற்பனைக்கு வந்து விட்டது. ஒரு ஜோடி கரும்பு, 60 முதல் 80 ரூபாய்க்குதான் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த, ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையின் போது, ஒரு ஜோடி கரும்பு, 100 ரூபாய் முதல், 150 ரூபாய் வரை விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு தெரிவித்தனர்.