/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்
ADDED : அக் 09, 2024 06:28 AM
குளித்தலை: குளித்தலை, அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். இதில், 24 மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அரசு மருத்துவர்கள், உரிய பரிசோதனை மேற்கொண்டு, மருத்துவ சான்று வழங்கி உடனடியாக தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. முகாமில் எலும்பு முறிவு மருத்துவர் தினேஷ், மனநல மருத்துவர் பாரதிகார்த்திகா, மாற்றுத்திறனாளிகள் செயல் திறன் உதவியாளர் ராகவன், பேச்சு பயிற்றுனர் கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம், பிரதி மாதம் இரண்டாம் செவ்வாய்க்கிழமை, குளித்தலை அரசு தலைமை மருத்துவமனையிலும், வாரந்தோறும் ஒவ்வொரு திங்கட்கிழமை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும், புதன் கிழமை கரூர் பழைய அரசு தலைமை மருத்துவமனையிலும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.