கைவிரல் ரேகை பதிவு செய்ய நாளை ரேஷனில் சிறப்பு முகாம்
கைவிரல் ரேகை பதிவு செய்ய நாளை ரேஷனில் சிறப்பு முகாம்
ADDED : செப் 18, 2026 07:09 AM
கரூர்:கைவிரல்
ரேகை, கண் கருவிழி அடிப்படையிலான சரிபார்ப்பு சிறப்பு முகாம் நாளை
ரேஷன் கடைகளில் நடக்கிறது என, கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தேசிய
உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி, முன்னுரிமை குடும்ப கார்டுகள்
அந்தியோதயா அன்ன யோஜனா, முன்னுரிமையற்ற கார்டு ஆகிய ரேஷன்
கார்டுகளில் ஆதார் விபரங்களை சரி பார்ப்பதற்காக, கார்ட்டில்
இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் கைவிரல் ரேகை, கண் கருவிழி
அடிப்படையிலான சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை
கைவிரல் ரேகை, கண் கருவிழி பதிவு செய்யாத பயனாளிகள் பதிவு செய்வதற்கு
ஏதுவாக, நாளை (19ம் தேதி), அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில்
சிறப்பு முகாம் நடக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
