ADDED : செப் 18, 2026 07:08 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்:வயலுார் பகுதிகளில் சூரியகாந்தி அறுவடை பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
கிருஷ்ணராயபுரம்
ஒன்றியத்திற்கு உட்பட்ட வயலுார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட
சரவணபுரம், வயலுார், பாம்பான்பட்டி, கணக்கம்பட்டி, நடுப்பட்டி,
தேவசிங்கப்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் சூரியகாந்தி சாகுபடி
செய்துள்ளனர். கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர்
பாய்ச்சப்படுகிறது. விளைச்சல் கண்டுள்ள செடிகளில், அறுவடை செய்யும்
பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அறுவடை செய்யப்பட்ட
விதைகளை, தனியாக பிரித்தெடுக்கும் பணிகளில் டிராக்டர் இயந்திரம்
பயன்படுத்தப்படுகிறது. பிரிக்கப்பட்ட சூரியகாந்தி விதைகள்
வெயிலில் உலர்த்தப்படுகிறது. சூரியகாந்தி சாகுபடி மூலம்
விவசாயிகளுக்கு ஓரளவு வருமானம்
கிடைக்கிறது.
