/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பி.எம். கிசான் திட்டத்தில் சிறப்பு முகாம்; கரூர் கலெக்டர் அழைப்பு
/
பி.எம். கிசான் திட்டத்தில் சிறப்பு முகாம்; கரூர் கலெக்டர் அழைப்பு
பி.எம். கிசான் திட்டத்தில் சிறப்பு முகாம்; கரூர் கலெக்டர் அழைப்பு
பி.எம். கிசான் திட்டத்தில் சிறப்பு முகாம்; கரூர் கலெக்டர் அழைப்பு
ADDED : மே 16, 2025 01:26 AM
கரூர், பி.எம். கிசான் திட்டத்தில் சிறப்பு முகாம் நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கரூர் மாவட்டத்தில், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் சிறப்பு முகாம், அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்கள் அலுவலகம், இந்திய அஞ்சல் கட்டண வங்கி மற்றும் பொது சேவை மையங்களில் நடக்கிறது. பி.எம். கிசான் 20வது தவணைத் தொகை வரும் ஜூனில் விடுவிக்க உள்ளதால், தகுதியுடைய விவசாயிகளின் நிலம் தொடர்பான விபரங்கள், வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்பு போன்ற அனைத்து முழுமையற்ற விபரங்களை சரி செய்து கொள்ளலாம்.
இத்திட்டத்தில் சேர, விடுபட்ட தகுதியான விவசாயிகள் ஏற்கனவே கிராம அளவில் நடக்கும் சிறப்பு முகாமில், நில உடமைகளை பதிவேற்றம் செய்த அடையாள எண்ணுடன் பதிவு செய்து பயன் பெறலாம். மாவட்டத்தில் ஏற்கனவே பி.எம். கிசான் திட்டத்தில், 19-வது தவணைத்தொகை பெற்று வந்த விவசாயிகளில், 11,384 பேர் நில உடைமை பதிவுகளை இதுவரை மேற்கொள்ளவில்லை.
எனவே எதிர்வரும், 20-வது தவணைத்தொகை தடையின்றி பெற நில உடைமை பதிவுகளை பதிவு செய்ய வேண்டும். இறந்த பயனாளிகளின் இறப்பு சான்றினை சமர்ப்பித்து, அவர் பெற்று வரும் நிதியை நிறுத்தவும் மற்றும் வாரிசுதாரர்கள் இத்திட்டத்தில் பயன்பெற தேவையான நில ஆவணங்களை முகாமில் சமர்ப்பிக்கலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.