/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இரண்டு கிராம பஞ்.,களில் சிறப்பு கிராம சபை கூட்டம்
/
இரண்டு கிராம பஞ்.,களில் சிறப்பு கிராம சபை கூட்டம்
ADDED : டிச 23, 2024 09:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, அணைப்பாளையம் பஞ்.,ல், சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. நிர்வாகி மாரிகண்ணு தலைமை வகித்தார். பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து மக்களிடம் விளக்கம் அளிக்கப்பட்டது.
கூட்டத்தில், பஞ்., தலைவர் கண்ணன், துணைத்தலைவர் முருகானந்தம், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரேவதி உள்பட பலர் பங்கேற்றனர்.குடாமணி பஞ்., சிறப்பு கிராம சபை கூட்டம், நிர்வாகி மோகன் தலைமையில் நடந்தது. பஞ்., தலைவர் முத்துகுமரப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.