/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புகழிமலை கோவிலில் கார்த்திகை சிறப்பு பூஜை
/
புகழிமலை கோவிலில் கார்த்திகை சிறப்பு பூஜை
ADDED : டிச 07, 2024 06:43 AM
கரூர்: புகழிமலை, பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், கார்த்திகை மாத வளர்பிறை சஷ்டியை யொட்டி சிறப்பு பூஜை நேற்று நடந்-தது.
பிரசித்தி பெற்ற, புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் மூலவருக்கு, கார்த்திகை மாத வளர்-பிறை சஷ்டியை யொட்டி பால், தயிர், பன்னீர், இளநீர்,
சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு
பூக்கள் அலங்-காரத்தில் மூலவர், பக்தர் களுக்கு காட்சியளித்தார். மஹா தீபாரா-தனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம்
வழங்கப்பட்டது. அதேபோல், நன்செய் புகழூர் அக்ரஹாரம் சுப்பிரமணிய சுவாமி கோவில், புன்னம் சத்திரம் பாலமலை
சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும், கார்த்திகை மாத வளர்பிறை சஷ்டியையொட்டி, சிறப்பு பூஜை நடந்தது.