/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பாப்பகாப்பட்டியில் சிறப்பு மருத்துவ முகாம்
/
பாப்பகாப்பட்டியில் சிறப்பு மருத்துவ முகாம்
ADDED : பிப் 23, 2024 02:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் அடுத்த பாப்பகாப்பட்டி பஞ்.,க்குட்பட்ட பெரிய குளத்துார், சின்னகுளத்துார் ஆகிய கிராமத்தில் மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில், பஞ்சப்பட்டி தலைமை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை நிர்வாகம் மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பில், சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.இதில் மக்களுக்கு வெயில் காலங்களில் காய்ச்சல், சளி ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகிய நோய்கள் குறித்து, டாக்டர் பார்த்திபன் தலைமையிலான மருத்துவ குழுவினர், பரிசோதனை செய்தனர். தொடர்ந்து, மருத்துவ ஆலோசனை, மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.