/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தளவாபாளையத்தில் சிறப்பு மருத்துவ முகாம்
/
தளவாபாளையத்தில் சிறப்பு மருத்துவ முகாம்
ADDED : ஆக 05, 2025 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், வாங்கல் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், தளவாபாளையத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.அதில் கர்ப்பிணி பெண்கள், பாலுாட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் உள்பட, 250க்கும் மேற்பட்டவர்களுக்கு, பல்வேறு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. சிலர் கரூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டு, மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.
மருத்துவ முகாமில், ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ரூபன்ராஜ், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.