/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
முத்து மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை, வழிபாடு
/
முத்து மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை, வழிபாடு
ADDED : மே 22, 2025 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் அடுத்த, மாயனுாரில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு திருவிழாவை முன்னிட்டு, காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடங்களை எடுத்து வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடந்தன.
நேற்று அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் பக்தர்கள் கிடா வெட்டுதல், கோழி அறுத்தல், பொங்கல் வைத்தல், மா விளக்கு பூஜை செய்து வழிபட்டனர். ஏராளமானோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.