/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கோமாரி நோய் தடுப்பூசி சிறப்பு முகாம்
/
கோமாரி நோய் தடுப்பூசி சிறப்பு முகாம்
ADDED : ஜூலை 12, 2025 01:37 AM
குளித்தலை :தேசிய கால்நடை நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ், கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக, 7வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வடசேரி பஞ்சாயத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
காவல்காரன்பட்டி கால்நடை மருந்தகம் சார்பாக, வடசேரி பஞ்.,க்கு உட்பட்ட தென்நகர், வடசேரி ஆகிய கிராமங்களில் நடந்த முகாமில், மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கோமாரி நோய் வைரஸ் கிரிமியால் ஏற்படுகிறது. இந்த நோய், நமது நாட்டில் கலப்பின மாடுகளை அதிகமாக தாக்குகிறது. மேலும் கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைகிறது.
இதேபோல் எருது மாடுகளும் பாதிக்கப்படுகின்றன. மேலும் பசுமாடுகள் சினை பிடிப்பது தடைபடுகிறது. இளம் கன்றுகளில் இறப்பு நேரிடுகிறது. எனவே, கோமாரி நோய்களின் பாதிப்புகளால் கால்நடை வளர்போருக்கு மிகுந்த பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. கோமாரி நோய்களில் இருந்து கால்நடைகளை பாதுகாத்துக் கொள்ள, ஆண்டுக்கு இரண்டு முறை கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக, தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது என, கால்நடை மருத்துவ அலுவலர் ரமேஷ் தெரிவித்தார்.