/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புதிய பாரதம் எழுத்தறிவு திட்டம் தன்னார்வலர்களுக்கு சிறப்பு பயிற்சி
/
புதிய பாரதம் எழுத்தறிவு திட்டம் தன்னார்வலர்களுக்கு சிறப்பு பயிற்சி
புதிய பாரதம் எழுத்தறிவு திட்டம் தன்னார்வலர்களுக்கு சிறப்பு பயிற்சி
புதிய பாரதம் எழுத்தறிவு திட்டம் தன்னார்வலர்களுக்கு சிறப்பு பயிற்சி
ADDED : ஜன 10, 2024 12:38 PM
குளித்தலை: குளித்தலை அடுத்த தோகைமலை யூனியன், பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்கத்தின் சார்பில், 2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்புபடி, 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுத, படிக்க தெரியாதவர்களுக்கு, அடிப்படை கல்வியை வழங்குவதற்கு தமிழக அரசு முடிவு செய்தது.
இதற்காக, புதிய பாரத எழுத்தறிவு திட்டம் - 2022-23ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நடப்பு கல்வி நிதியாண்டான, 2023-24ன் படி, தோகைமலை வட்டாரத்தில் உள்ள, 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்க தெரியாதவர்களுக்கு, அடிப்படை கல்வியை வழங்குவதற்கு, அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மூலம், 50 பள்ளி வளாகங்களில் தன்னார்வலர்கள் உதவியுடன், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில், பணியாற்றும் தன்னார்வலர்களுக்கு ஒருநாள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் தமிழ்செல்வன் தலைமை வகித்து, பல்வேறு தலைப்புகளில் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் ராஜலெட்சுமி, பயிற்சியை தொடங்கி வைத்து, பல்வேறு ஆலோசனை வழங்கினார்.