/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கந்தன்குடி பகவதியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
/
கந்தன்குடி பகவதியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED : மார் 11, 2025 06:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கந்தன்குடி கிராமத்தில், பகவதியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிவாயம் பஞ்சாயத்து கந்தன்குடி கிராமத்தில் பகவதியம்மன் கோவில் உள்ளது. திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் ஆற்றில் இருந்து பக்தர்கள் காவிரி நீர் எடுத்து வந்தனர். நேற்று அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, பூஜை நடந்தது. பக்தர்கள் கிடா வெட்டுதல், அக்னி சட்டி எடுத்தல் ஆகிய நேர்த்திக்கடன்களை செலுத்தி வழிபட்டனர். திரளானோர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.