/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குப்பம் வீரமாத்தியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
/
குப்பம் வீரமாத்தியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED : ஜன 01, 2025 06:07 AM
க.பரமத்தி: மார்கழி மாத அமாவாசையையொட்டி, குப்பம் வீரமாத்தியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
க.பரமத்தி குப்பம் அருகில், உப்புபாளையம் வீரமாத்தியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் மாலை மார்கழி மாத அமாவாசையையொட்டி பால், பன்னீர், சந்தனம், இளநீர், தேன், கரும்புச்சாறு போன்ற மூலிகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதே போல க.பரமத்தி மாரியம்மன், சூடாமணி மாசாணியம்மன், புன்னம் அங்காளம்மன், ஆரியூர் செல்லாண்டியம்மன், அத்திப்பாளையம் பொன்னாச்சியம்மன், குப்பம் பொன்காளியம்மன், க.பரமத்தி அஷ்ட நாகேஸ்வரி அம்மன் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.