/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சர்வீஸ் சாலையில் உள்ள வேகத்தடையில் வெள்ளை வண்ணம் பூச வேண்டும்
/
சர்வீஸ் சாலையில் உள்ள வேகத்தடையில் வெள்ளை வண்ணம் பூச வேண்டும்
சர்வீஸ் சாலையில் உள்ள வேகத்தடையில் வெள்ளை வண்ணம் பூச வேண்டும்
சர்வீஸ் சாலையில் உள்ள வேகத்தடையில் வெள்ளை வண்ணம் பூச வேண்டும்
ADDED : மே 16, 2025 01:25 AM
கரூர், ரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சர்வீஸ் சாலையில் உள்ள
வேகத்தடையில் வெள்ளை வண்ணம் பூச
நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர். கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், வெங்ககல்பட்டி, உப்பிடமங்கலம் உள்பட பல பகுதிகளில் மேம்பாலம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
இந்த மேம்பாலத்தை ஒட்டி, கிராம பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும், மேம்பாலத்தை
அடையும் வகையில் சர்வீஸ் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த, வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. அதன்மீது பூசப்பட்ட வண்ணம் அழிந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள்
அவதிக்கு உள்ளாகின்றனர். இவ்வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள், வேகத்தடை இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்குகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் வருவோர், வேகத்தடை மீது ஏறி, இறங்கி விழுகின்றனர். எனவே, வேகத்தடையின் மீது வெள்ளை வண்ணம் பூச
நடவடிக்கை எடுக்க வேண்டும்.