/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாவட்ட தி.மு.க., சார்பில் விளையாட்டு போட்டி
/
மாவட்ட தி.மு.க., சார்பில் விளையாட்டு போட்டி
ADDED : மார் 03, 2025 07:30 AM
குளித்தலை: தமிழக முதல்வர் ஸ்டாலினின், 72வது பிறந்த நாளையொட்டி, மாவட்ட தி.மு.க., சார்பில், 13 பஞ்சாயத்து, ஒரு நகராட்சி, இரண்டு டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது.
இதில், குமாரமங்கலம் பஞ்., பகுதியில் நடந்த விளையாட்டு போட்டிகளை, மேற்கு ஒன்றிய செயலாளர் தியாகராஜன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். இதில், ஓட்டப்பந்தயம், பாட்டுப்போட்டி, நடன போட்டி மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. மாவட்ட பொறுப்பாளர் ஜெகநாதன் உள்ளிட்ட, தி.மு.க., பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இதேபோல், மருதுார் டவுன் பஞ்., மேட்டுமருதுார் கிராமத்தில், டவுன் பஞ்., தலைவர் சகுந்தலா, நகர செயலாளர் ரவி தலைமையில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.