/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மகசூல் அதிகரிக்க 'ட்ரோன்' மூலம் மருந்து தெளிக்கும் பணி
/
மகசூல் அதிகரிக்க 'ட்ரோன்' மூலம் மருந்து தெளிக்கும் பணி
மகசூல் அதிகரிக்க 'ட்ரோன்' மூலம் மருந்து தெளிக்கும் பணி
மகசூல் அதிகரிக்க 'ட்ரோன்' மூலம் மருந்து தெளிக்கும் பணி
ADDED : ஜன 03, 2025 01:09 AM
கிருஷ்ணராயபுரம், ஜன. 3-
பயறு வகை பயிர்களுக்கு, மகசூல் அதிகரிக்க ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பது எவ்வாறு என்பது குறித்து, விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த மணவாசி கிராமத்தில், துவரை, உளுந்து, பாசிப்பயறு ஆகியவற்றை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது பயறு வகை பயிர்கள், நல்ல முறையில் வளர்ச்சி கண்டுள்ளது. இந்த பயிர்களுக்கு, சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையம் சார்பில், ட்ரோன் மூலம் திரவ மருந்து தெளிப்பது குறித்து, செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. ட்ரோன் மூலம் தெளிப்பதால், பயிர்களுக்கு பேரூட்ட சத்துக்கள், நுண்ணுாட்ட சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்து பூஸ்டராக கிடைக்கும். பூக்கள் பிடிக்கும் பருவத்தில் ஏக்கருக்கு, 2 கிலோ வீதம் 200 லிட்டர் தண்ணீரில் ஒட்டும் திரவம் கலந்து தெளிப்பதன் மூலம் பயிர்கள் பூக்கள் உதிர்வது குறைகிறது.
இதன் மூலம், 20 சதவீதம் வரை மகசூல் அதிகரிக்கும். மேலும் வறட்சி தாங்கும் தன்மை அதிகரிக்கும். தற்போது அதிகரித்து வரும் வேலையாட்கள் தட்டுப்பாடு மற்றும் சாகுபடி செலவை குறைக்க ட்ரோன் மூலம் திரவங்களை தெளிக்கலாம். சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜாபாபு, மணவாசி, கோரக்குத்தியை சேர்ந்த முன்னோடி விவசாயி சுப்புராமன்
உள்பட பலர் கலந்து
கொண்டனர்.