/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உங்களுடன் ஸ்டாலின் முகாம் ரூ.36.90 லட்சத்தில் நல உதவி
/
உங்களுடன் ஸ்டாலின் முகாம் ரூ.36.90 லட்சத்தில் நல உதவி
உங்களுடன் ஸ்டாலின் முகாம் ரூ.36.90 லட்சத்தில் நல உதவி
உங்களுடன் ஸ்டாலின் முகாம் ரூ.36.90 லட்சத்தில் நல உதவி
ADDED : ஆக 13, 2025 06:23 AM
கரூர்: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ஆசாத் சாலையில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடந்தது. இதில், கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி நலத்-திட்ட உதவிகளை வழங்கினார்.
அதில், கரூர் நகர கூட்டுறவு வங்கி சார்பில், 36.90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 3 மகளிர் சுயஉதவிக்குழு கடனுதவிக-ளையும், வருவாய்த்துறை சார்பில், ஏழு பேருக்கு இருப்பிடம், ஜாதி, வருமான சான்றிதழ், மாநகராட்சி சார்பில், 8 பேருக்கு பிறப்பு சான்றிதழ், சொத்துவரி பெயர் மாற்றத்திற்கான ஆணை, எரிசக்தி துறை சார்பில், 2 பேருக்கு மின் இணைப்பு பெயர் மாற்-றத்திற்கான ஆணை என, மொத்தம், 20 பேருக்கு 36.90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை, கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி வழங்கினார். முகாமில், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன், டி.ஆர்.ஓ., கண்ணன், மாநகராட்சி கமிஷனர் சுதா உள்பட பலர் பங்கேற்றனர்.