/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்டத்தில் 27 இடங்களில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
/
கரூர் மாவட்டத்தில் 27 இடங்களில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
கரூர் மாவட்டத்தில் 27 இடங்களில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
கரூர் மாவட்டத்தில் 27 இடங்களில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
ADDED : ஆக 10, 2025 01:25 AM
கரூர் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், 27 மருத்துவ முகாம் நடக்கிறது என, கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி கூறினார்.
கரூர் அருகே, நெரூரில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி முகாமை பார்வையிட்ட பின், நிருபர்களிடம் கூறியதாவது:
இத்திட்டத்தின் மூலம், அனைத்து வகையான உடல் பரிசோதனைகளும், 17 வகையான சிறப்பு மருத்துவ சிகிச்சைகளும், முதல்வரின் விரிவான காப்பீடு திட்ட அட்டை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் மொத்தம், 24 முகாம்களும், கரூர் மாநகராட்சியில், மூன்று என மொத்தம், 27 முகாம்கள் நடக்கிறது. ஒவ்வொரு சனிக்கிழமையிலும், ஒரு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது. கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள், வளர்ச்சி குன்றிய குழந்தைகள், நீரழிவு நோய் மற்றும் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இதய நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை இலக்காகக் கொண்டு முகாம் நடத்தப்படுகிறது.
இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து, ஆண்டாங்கோவில் கிழக்கு பஞ்சாயத்தில் வீடு, வீடாக சென்று குப்பை சேகரிக்க ஏதுவாக துாய்மை பாரத இயக்கம் மற்றும் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ், 32.89 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய, 13 மின்கல வாகனங்களையும், 2.48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 44 துாய்மை பணியாளர்களுக்கு சீருடை, பாதுகாப்பு உபகரணங்களை எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி வழங்கினார்.
எம்.எல்.ஏ.,க்கள் மாணிக் கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, டி.ஆர்.ஓ., கண்ணன், இணை இயக்குனர் (மருத்துவ பணிகள்) செழியன், துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) சுப்பிரமணியன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.