/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் 500க்கும் மேற்பட்ட மனுக்கள் அளிப்பு
/
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் 500க்கும் மேற்பட்ட மனுக்கள் அளிப்பு
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் 500க்கும் மேற்பட்ட மனுக்கள் அளிப்பு
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் 500க்கும் மேற்பட்ட மனுக்கள் அளிப்பு
ADDED : செப் 04, 2025 01:31 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த, கழுகூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், சப்-கலெக்டர் சுவாதி ஸ்ரீ தலைமையில் நடந்தது. தாசில்தார் இந்துமதி, தோகைமலை யூனியன் கமிஷனர்கள் ராஜேந்திரன், பாலசுப்பிரமணியன், ஆர்.ஐ, முத்துக்கண்ணு ஆகியோர் முன்னிலை
வகித்தனர்.
முகாமில், கழுகூர் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் சார்பில், 7 மகளிர் குழுக்களுக்கு 43 லட்சம் வங்கிக் கடனும், பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, வாரிசு சான்றிதழ், 100 நாள் வேலைக்கான அடையாள அட்டை ஆகியவற்றை, எம்.எல்.ஏ., மாணிக்கம் வழங்கினார். பின்னர், பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார்.
கழுகூர், சின்னையம் பாளையம் ஊராட்சிகளுக்காக நடந்த முகாமில், வருவாய், மின்சாரம், மாற்றுத்திறனாளிகள், சமூக நலத்துறை உள்ளிட்ட, 13 துறைகள் சார்பில்
உதவித்தொகை, மகளிர் உரிமை தொகை, குடும்ப அட்டை, பட்டா பெயர் மாற்றம், ஆதார் கார்டு உள்ளிட்ட 45 சேவைகளுக்கு விண்ணப்பங்கள்
பெறப்பட்டன.
கழுகூர் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க செயலாளர் முருகேசன், களமேலாளர் ஆசிக் இக்பால். அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். முகாமில், 500க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.