ADDED : ஜூலை 26, 2025 01:05 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த, மருதுார் டவுன் பஞ்., அலுவலகத்தில் நேற்று, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. சப்-கலெக்டர் சுவாதிஸ்ரீ தொடங்கி வைத்தார்.
பொது மக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்களுக்கு, உரிய ஒப்புகை சீட்டு கொடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
சிறப்பாளராக குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம் பங்கேற்று, பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, நலத்திட்ட உதவி கள் வழங்கினார். உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, ஆதி திராவிட மற்றும் பழங்குடியின நலத்துறை, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, தொழிலாளர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மண்டல டவுன் பஞ்., உதவி இயக்குனர் ராஜா முகாமை பார்வையிட்டார். குளித்தலை தாசில்தார் இந்துமதி, மாவட்ட மறுவாழ்வு அலுவலர் மோகன்ராஜ், டவுன் இ.ஒ.,(பொ) காந்த ரூபன், தலைவர் சகுந்தலா, துணைத்தலைவர் நாகராஜன், வார்டு கவுன்சிலர்கள், அரசு அலுவலர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.