/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரம் யூனியனில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்
/
கிருஷ்ணராயபுரம் யூனியனில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்
கிருஷ்ணராயபுரம் யூனியனில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்
கிருஷ்ணராயபுரம் யூனியனில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்
ADDED : ஜூலை 17, 2025 01:37 AM
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., சார்பில், முதல்வர் ஸ்டாலின் அறிவித்த, 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு திட்ட முகாம், கிருஷ்ணராயபுரம் அக்ரஹாரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில், கிருஷ்ணயபுரம் டவுன் பஞ்.,க்குட்பட்ட வார்டுகளில் உள்ள மக்களுக்கு தங்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் தீர்வு காணும் வகையில், 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாமில் வார்டு மக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. இதில், 13 துறைகளில் இருந்து அரசு அலுவலர்கள்
கலந்துகொண்டு, 43 வகையிலான மக்கள் சேவை திட்டங்களுக்கு தீர்வு காணப்படுகிறது.
மேலும், அரசு அலுவலர்கள் மக்கள் இருக்கும் இடங்களுக்கு சென்று மக்களுக்கு தேவையான திட்டத்தை தீர்வு செய்யும் வகையில் இந்த சிறப்பு திட்டம் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., தலைவர் சேதுமணி, தி.மு.க., நகர செயலாளர் சசிக்குமார், மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் ரவிராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
* இதேபோல், கிருஷ்ணராயபுரம் அடுத்த பாலராஜபுரம், ரெங்கநாதபுரம் ஆகிய பஞ்.,களில், 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் நடந்து. இதில், 15 வயைான அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.