/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலை அடுத்த இனுங்கூரில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்
/
குளித்தலை அடுத்த இனுங்கூரில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்
குளித்தலை அடுத்த இனுங்கூரில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்
குளித்தலை அடுத்த இனுங்கூரில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்
ADDED : அக் 08, 2025 01:54 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த இனுங்கூர் பஞ்., கட்டளை மேட்டுவாய்க்கால் கரையில் அமைந்துள்ள காளியம்மன் சமுதாய கூடத்தில், நேற்று காலை, 10:30 மணிக்கு, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்தது. குளித்தலை சப்-கலெக்டர் சுவாதிஸ்ரீ தலைமை வகித்தார்.
தாசில்தார் இந்துமதி, யூனியன் கமிஷனர்கள் விஜயகுமார், சுந்தரபாண்டியன், மாஜி மாவட்ட பஞ்., குழு துணை தலைவர் தேன்மொழி, குளித்தலை ஒன்றிய செயலாளர் தியாகராஜன், மாஜி பஞ்., துணைத்தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துணை தாசில்தார் நீதிராஜன், தனி தாசில்தார் வெங்கடேசன் ஆகியோர், துறை சார்ந்த அரசு திட்டங்கள் குறித்து பேசினர். குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி, கோரிக்கை மனுக்களை பெற்றார்.