/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வேங்காம்பட்டி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
/
வேங்காம்பட்டி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
வேங்காம்பட்டி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
வேங்காம்பட்டி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
ADDED : செப் 20, 2025 01:48 AM
கிருஷ்ணராயபுரம், வேங்காம்பட்டி கிராமத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், ஏராளமானோர் அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த கருப்பத்துார் பஞ்சாயத்து, வேங்காம்பட்டி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம் தலைமை வகித்தார்.
கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கருப்பத்துார், பிள்ளபாளையம் பஞ்., மக்களுக்கு தேவையான நல திட்டம் கிடைக்கும் வகையில், முகாம் நடத்தப்பட்டது. வருவாய், வேளாண்மை, ஊரக வளர்ச்சி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முகாமில் பெரும்பாலானோர் பட்டா மறுதல், குடிநீர் இணைப்பு, மகளிர் உரிமைத்தொதை கேட்டு விண்ணப்பம் என கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
கிருஷ்ணராயபுரம் தாசில்தார் பிரபகாரன், கிருஷ்ணராயபுரம் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன், கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலர் கதிரவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.