/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்
/
கரூர் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்
கரூர் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்
கரூர் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்
ADDED : அக் 15, 2025 01:52 AM
கரூர், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், இன்று பல்வேறு இடங்களில் நடக்கிறது என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை
யில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று நடக்கிறது. இதில், கரூர் மாநகராட்சியில், 31வது வார்டுக்கு, கரூர் நாரத கான சபா மண்டபத்திலும், தான்தோன்றிமலை வட்டாரம்
கோயம்பள்ளி பஞ்.,க்கு கோயம்பள்ளி வி.பி.எஸ்.சி., கட்டடத்திலும், தோகைமலை வட்டாரம், கூடலுார் பஞ்.,க்கு பேரூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் முகாம் நடக்கிறது. இதில், பொதுமக்கள் பங்கேற்று கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் அளிக்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.