தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/க.பரமத்தியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

க.பரமத்தியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

க.பரமத்தியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்


ADDED : ஜன 25, 2026 08:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2026 08:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரவக்குறிச்சி: க.பரமத்தி அரசு மேல்நிலைப் பள்ளியில், நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது.

இதை பார்வையிட்ட கலெக்டர் தங்கவேல் கூறியதாவது:நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் மூலம், அனைத்து வகையான உடல் பரிசோதனைகளும், 17 வகையான சிறப்பு மருத்துவ சிகிச்சைகளும், முதல்வரின் விரிவான காப்பீடு திட்ட அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றி-தழ்கள் வழங்கப்பட உள்ளது. பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு மருத்-துவம், பேறுகால மருத்துவம், குழந்தைகள் நல

மருத்துவம் உள்பட பல்வேறு சிகிச்சைகள் சிறப்பு மருத்துவ நிபுணர்களால் வழங்கப்பட உள்ளது. அனைத்து சிகிச்சை, பரிசோதனைகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படுகிறது.கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள், வளர்ச்சி குன்றிய குழந்தைகள், நீரழிவு நோய் மற்றும் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்ட-வர்கள், இதய நோயாளிகள் மற்றும் மாற்றுத்திற-னாளிகளை இலக்காக கொண்டு முகாம் நடந்து வருகிறது.

கரூர் மாவட்டத்தில் கடந்தாண்டு ஆக.,2 முதல் ஜன., 22 வரை நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் மூலம், 12,540 ஆண்கள், 21,068 பெண்கள் என மொத்தம், 33,750 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்-ளது.இவ்வாறு கூறினார்.

பின்னர், காசநோயால் பாதிக்கப்பட்ட 3 பேர், 12 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்க-ளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்-பாக ஒருவருக்கு தேசிய அடையாள அட்டை மற்றும் ஊன்றுகோலையும், தொழிலாளர் நலத்-துறை சார்பாக மூவருக்கு துாய்மை பணியாளர்க-ளுக்கான நலவாரிய அட்டைகளை, கலெக்டர் தங்கவேல் வழங்கினார்.முகாமில் துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) சுப்பிரமணியன், மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் மற்றும் தொடர்புடைய அரசு அலு-வலர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us