/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காவல்காரன்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
/
காவல்காரன்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
காவல்காரன்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
காவல்காரன்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
ADDED : செப் 27, 2025 01:17 AM
குளித்தலை குளித்தலை அடுத்த, காவல்காரன்பட்டி திருமண மண்டபத்தில் வடசேரி மற்றும் பில்லுார் பஞ்., பகுதி பொதுமக்களுக்காக உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.
கமிஷனர்கள் ராஜேந்திரன், பாலசுப்பிரமணி ஆகியோர் தலைமை வகித்தனர். தோகைமலை யூனியன் குழு முன்னாள் தலைவர் சுகந்தி சசிகுமார், முன்னாள் பஞ்.. தலைவர் பில்லுார் ராகவன், யூனியன் கவுன்சிலர் சின்னையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சப்-கலெக்டர் சுவாதிஸ்ரீ முகாமை பார்வை யிட்டார். தாசில்தார் இந்துமதி, துணை தாசில்தார் நீதிராஜன், தனிதாசில்தார்கள் வெங்கடேசன், மதியழகன் ஆகியோர் அரசின் திட்டங்கள் குறித்து பேசினர். பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்ற தி.மு.க., எம்.எல்.ஏ., மாணிக்கம், நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.