/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம்
/
உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம்
ADDED : ஆக 30, 2025 01:23 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த, திம்மம்பட்டி அரசு உயர் நிலைப்பள்ளி வளாகத்தில், நேற்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் கலெக்டர் தங்க வேல் தலைமையில் நடந்தது.
முகாமில், அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். சப்-கலெக்டர் சுவாதிஸ்ரீ, தாசில்தார் இந்துமதி மற்றும் யூனியன் கமிஷனர்கள். தனி தாசில்தார் வெங்கடேசன், ஆர்.ஐ., தமிழரசி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வருவாய், மின்சாரம், மாற்றுத்திறனாளிகள், சமூக நலத்துறை உள்ளிட்ட, 13 துறைகள் சார்பில் உதவித்தொகை, மகளிர் உரிமை தொகை, குடும்ப அட்டை, பட்டா பெயர் மாற்றம், இடமாற்றம், ஆதார் கார்டு உள்ளிட்ட 43 சேவைகளுக்கு பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. முகாமில், 300க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.