ADDED : பிப் 17, 2025 03:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த மேட்டுப்பட்டி பகுதியில் இருந்து தாளியாம்பட்டி, புதுப்பட்டி, சிகாம்பட்டி, வீரவள்ளி, மங்-கம்மாள் சாலை வரை இணைகிறது.
இந்த சாலை பல இடங்-களில் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பெரும் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் சாலை புதுப்பிக்கும் பணி தொடங்கி உள்ளது. இதில், பழைய தார்ச்சாலையை அகற்-றிவிட்டு புதிய தார்ச்சாலை அமைக்கும் வகையில், பொக்லைன் இயந்திரம் கொண்டு சாலையில் கீறி விடும் பணி நடக்கிறது.

