/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாநில அளவிலான கலைத்திருவிழா தொடக்கம்
/
மாநில அளவிலான கலைத்திருவிழா தொடக்கம்
ADDED : நவ 26, 2025 01:57 AM
கரூர்,கரூர் ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் அறிவியல் கல்லுாரியில், பள்ளி கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டி தொடங்கியது.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இணை இயக்குனர் குமார் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின், கலைத் திறன்களை வெளிக்கொண்டு வரும் வகையில், கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மாநில அளவிலான போட்டியில், 1 முதல், 5 ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். 1 மற்றும் 2ம் வகுப்புகளுக்கு ஒரு பிரிவாகவும், 3 முதல், 5ம் வகுப்புகளுக்கு மற்றொரு பிரிவாகவும் போட்டிகள் நடந்தன.
கவின்கலை, நுண்கலை, இசை (வாய்ப்பாட்டு), நடனம் மற்றும் நாடகம் ஆகிய, 5 பிரிவுகளின் கீழ், 18 விதமான போட்டிகளில் மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். 38 மாவட்டங்களை சேர்ந்த, 992 பள்ளிகளில் இருந்து, 2,265 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜூ, மாவட்ட கல்வி அலுவலர்கள் சண்முகவேல், செல்வமணி உள்பட
பலர் பங்கேற்றனர்.

