ADDED : செப் 24, 2024 01:09 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, கல்லடை பஞ்., கீழவெளியூர் திருமலை நகரில் முன்னாள் பஞ்., தலைவர் பெரியசாமி நினைவாக வெற்றி விநாயகா, வேலு பிரதர்ஸ் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக மாநில அளவிலான இரண்டாம் ஆண்டு கபடி போட்டி நடந்தது.
பஞ்., தலைவர் ராஜலிங்கம் தலைமை வகித்தார். கரூர், திருச்சி, நாமக்கல், ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 33 அணிகள் கலந்து கொண்டன. இரண்டு நாட்களாக போட்டி நடந்தது. இறுதி போட்டிக்கு கரூர்
மாவட்டம், கீழவெளியூர் தென்னநகர் சின்னத்துரை நினைவு கபடிக்குழு அணியினரும், கூடலுார் பஞ்., ராக்கம்பட்டி ஸ்போர்ட்ஸ் கிளப் கபடி அணியும் மோதின. முடிவில், 28 புள்ளிகளை பெற்று கீழவெளியூர் தென்னநகர் சின்-னத்துரை நினைவு கபடிக் குழு அணி முதல் பரிசாக, 10 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் சுழற் கோப்பையை தட்டிச்சென்றது. 18 புள்ளிகளை பெற்ற ராக்கம்பட்டி
ஸ்போர்ட்ஸ் கிளப் கபடி குழு-விற்கு இரண்டாம் பரிசாக, 8,000 ரொக்கப்பணம் மற்றும் சுழற்-கோப்பை வழங்கப்பட்டது.
மூன்றாவது பரிசு, 5,000 ரூபாய், சுழற்கோப்பையை கீழவெளியூர் திருமலை நகர் வெற்றி விநாயகா கபடி ஸ்போர்ட்ஸ் குழுவி-னரும், நான்காவ பரிசு, 5,000 ரூபாய், சிறப்பு கோப்பையை கீழ-வெளியூர் சசி பிரதர்ஸ் ஸ்போர்ட்ஸ்
கிளப் அணியும் பெற்றனர்.கால் இறுதியில் தோல்வியுற்ற அணிகளுக்கு தலா, 2,000 முதல், 5,000 ரூபாய் வரை சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. மேலும் சிறந்த அணி, சிறந்த வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

