முருங்கை பயிரில் தண்டு துளைப்பான் தாக்குதல்: பாதுகாக்கும் வழிமுறைகள்
முருங்கை பயிரில் தண்டு துளைப்பான் தாக்குதல்: பாதுகாக்கும் வழிமுறைகள்
ADDED : ஜூன் 30, 2026 05:15 AM
கரூர்; முருங்கை பயிரில் தண்டு துளைப்பான் தாக்கு-தலில் இருந்து, பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து கலெக்டர் முத்துக்குமரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, க.பரமத்தி, தான்தோன்றிமலை வட்டாரங்களில் உள்ள முருங்கை பயிரில், தண்டு துளைப்பான் தாக்-குதல் அதிகரித்து காணப்படுகிறது. பாக்டோசிரா இனத்தை சேர்ந்த வண்டுகளின் புழுக்கள் தண்டு மற்றும் கிளைகளுக்குள் நுழைந்து மரப்பகுதியை தின்று சேதப்படுத்துகின்றன. இப்பூச்சி தாக்கு-தலால் தண்டு, கிளைகளில் வட்டமான துளைகள் காணப்படும். துளைகளில் இருந்து மரத்துாள் போன்ற கழிவுகள் வெளியேறும். பாதிக்கப்பட்ட கிளைகளில் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி வாடும்.போர்டாக்ஸ் கலவை
தாக்குதலில் கிளைகள் காய்ந்து மரம் இறக்க நேரிடும். பாதிக்கப்பட்ட கிளைகள் மற்றும் அழு-கிய பகுதிகளை அகற்றி அழிக்க வேண்டும். துளைகளுக்குள் கம்பி செலுத்தி புழுக்களை அழிக்க வேண்டும். இயற்கை முறையில் கட்டுப்-படுத்த உயிரியல் பூச்சிக்கொல்லியான பெவே-ரியா பேசியானா மருந்தை ஒரு லிட்டர் தண்ணீ-ருக்கு, 10 மி.லி., வீதம் கலந்து துளைக்குள் ஊற்ற வேண்டும், அதன் பிறகு அந்த துளையை அடைக்க வேண்டும். தண்டு அழுகல் மற்றும் பூஞ்சை நோய் தாக்குதலை கட்டுப்படுத்த காப்பர் ஆக்ஸி குளோரைடு மருந்தை ஒரு லிட்டர் நீரில், 3 கிராம் வீதம் கலந்து தெளிக்கலாம் அல்லது போர்டாக்ஸ் கலவையை தடவலாம்.
தொடர் கண்காணிப்பு
மரத்தின் அடிப்பகுதியில், 3 அடி உயரத்திற்கு தளர்வான பட்டையை சுரண்டி, நிலக்கரி தாருடன் மண்ணெண்ணையை, 1:2 என்ற விகி-தத்தில் கலந்து பூசுவதன் மூலம் வண்டுகள் முட்டை இடுவதை தடுக்கலாம். முருங்கை விவசாயிகள் தங்கள் தோட்டங்களை தொடர்ந்து கண்காணித்து, நோய் தாக்குதல்களை கட்டுப்ப-டுத்துவதன் மூலம் மகசூல் இழப்பைத் தவிர்க்-கலாம்.
இவ்வாறு, அதில், கூறியுள்ளார்.
