/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பூச்சாங்கிணறு அருகே தெரு விளக்கு தேவை
/
பூச்சாங்கிணறு அருகே தெரு விளக்கு தேவை
ADDED : நவ 26, 2025 02:32 AM
அரவக்குறிச்சி, தெரு விளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில் நடமாடுவதற்கு மக்கள் சிரமப்படுகின்றனர்.
அரவக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட, 7வது வார்டு பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இதில், பூச்சாங்கிணறு அருகேயும் மக்கள் வசித்து வருகின்றனர். இதன் நுழைவாயிலில் தண்ணீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளதால், சாலை முழுவதும் ஈரப்பதத்துடனேயே இருக்கும். இரவு நேரங்களில், தெரு விளக்குகள் இல்லாததால் சாலையைக் கட
க்கும் போது, ஈரப்பதமான தண்ணீரில் கால் வைத்து வழுக்கி விழும் நிலை உள்ளது. தெரு விளக்குகள் இல்லாததால், சிறுவர்கள் வெளியே வந்து விளையாட முடியாத நிலை உள்ளது. பேரூராட்சி நிர்வாகம் இதனை கருத்தில் கொண்டு, பூச்சாங்கிணறு பகுதியில் தெருவிளக்குகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

