/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தெரு விளக்குகள் எரிய நடவடிக்கை தேவை
/
தெரு விளக்குகள் எரிய நடவடிக்கை தேவை
ADDED : மார் 09, 2024 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் அருகே கோடங்கிப்பட்டியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
ஆனால், அந்த பகுதியில் உள்ள பெரும்பாலான தெரு விளக்குகள் இரவு நேரத்தில் எரிவது இல்லை. பலமுறை அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தும், மின்வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதனால், இரவு நேரத்தில், வழிப்பறி கொள்ளை அதிகரித்து வருகிறது. மேலும், தெருநாய்கள் அதிகம் உள்ளதால், பொதுமக்கள் இரவு நேரத்தில் பீதியில் உள்ளனர். இதனால், கோடங்கிப்பட்டி பகுதியில் உள்ள, தெரு விளக்குகளை எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

