/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தி.மு.க., அரசின் சாதனை விளக்க தெருமுனை கூட்டம்
/
தி.மு.க., அரசின் சாதனை விளக்க தெருமுனை கூட்டம்
ADDED : ஆக 21, 2025 02:02 AM
குளித்தலை, நச்சலுார் பஸ் ஸ்டாண்டில் நங்கவரம் நகர தி.மு.க., இளைஞர் அணி சார்பில், கருணாநிதி பிறந்த நாள் விழா மற்றும் அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடதந்து.
குளித்தலை அடுத்த, நங்கவரம் டவுன் பஞ்., நச்சலூர் பஸ் ஸ்டாண்டில் நடந்த கூட்டத்திற்கு, நங்கவரம் நகர செயலர் சுப்பிரமணி தலைமை வைத்தார். நகர இளைஞரணி அமைப்பாளர் செல்வகுமார் வரவேற்றார்.
மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நந்தினி யுவராஜ், மாவட்ட பிரதிநிதிகள் சங்கர், செந்தில்வேலவன், நங்கவரம் டவுன் பஞ்., தலைவர் ராஜேஸ்வரி, துணைத் தலைவர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமை பேச்சாளர்கள் தர்மபுரி அதியமான், இளம் பேச்சாளர் மோகநதி, குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம் ஆகியோர், அரசின் சாதனைகள் குறித்து பேசினர்.
நங்கவரம் டவுன் பஞ்., கவுன்சிலர்கள் லதா, ரவிச்சந்திரன், செல்வம், செல்வக்கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நகர இளைஞரணி துணை அமைப்பாளர் ஹரிதாஸ் நன்றி கூறினார்.