/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சி அரசு கலை கல்லுாரியில் நாளை மாணவர் சேர்க்கை துவக்கம்
/
அரவக்குறிச்சி அரசு கலை கல்லுாரியில் நாளை மாணவர் சேர்க்கை துவக்கம்
அரவக்குறிச்சி அரசு கலை கல்லுாரியில் நாளை மாணவர் சேர்க்கை துவக்கம்
அரவக்குறிச்சி அரசு கலை கல்லுாரியில் நாளை மாணவர் சேர்க்கை துவக்கம்
ADDED : மே 08, 2025 01:23 AM
அரவக்குறிச்சி, மே 8
அரவக்குறிச்சி, அரசு கலை அறிவியல் கல்லுாரியில், நாளை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது என, கல்லுாரி முதல்வர் வசந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
அரவக்குறிச்சி, அரசு கலை அறிவியல் கல்லுாரியில் இளங்கலை மற்றும் இளம் அறிவியல் மாணவர் சேர்க்கை இன்று முதல் 27ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இளங்கலை தமிழ் (பி.ஏ., தமிழ்) மற்றும் இளங்கலை ஆங்கிலம் (பி.ஏ., ஆங்கிலம்), இளம் அறிவியல் கணிதம் (பி.எஸ்.சி., கணிதம்) மற்றும் கணினி அறிவியல், வணிகவியல் (பி.காம்.,) ஆகிய பாடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. மாணவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யலாம்.
நேரடியாக கலந்து கொள்பவர்கள் தங்கள் மாற்றுச்சான்றிதழ் (டிசி), (மாற்று சான்றிதழில் இ.எம்.ஐ.எஸ்., எண் இருக்க வேண்டும்), 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள், ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல் மற்றும் 5 நகல்கள். 5 போட்டோ ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். மேலும் விபரங்களுக்கு கல்லுாரி வளாகத்தில் உள்ள உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.