/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மரக்கிளை விழுந்து விபத்து காயமடைந்த மாணவன் பலி
/
மரக்கிளை விழுந்து விபத்து காயமடைந்த மாணவன் பலி
ADDED : மார் 31, 2025 02:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்டம், ஏமூர் சீத்தப்பட்டி பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் தென்னரசு, 16; இவர், கரூரில் உள்ள தனியார் பள்ளியில், பிளஸ் 1 படித்து வந்தார்.
கடந்த, 27ல், கரூர் காந்தி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில், பொதுத்தேர்வு எழுதிவிட்டு, திருச்சி சாலை கவுண்டம்பாளையம் பகுதியில், 'பிளண்டர் பிளஸ்' டூவீலரில் சென்று கொண்டி-ருந்தார். அப்போது, சாலையோரரத்தில் இருந்த புளிய மரத்தின் கிளை முறிந்து, மாணவன் தென்னரசு மீது விழுந்தது. அதில், தலையில் படுகாயமடைந்த தென்னரசை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று உயிரி-ழந்தார். பசுபதிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.