/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஐ.டி.ஐ., தொழில்நுட்ப தேர்வில் டி.என்.பி.எல்., மாணவி சாதனை
/
ஐ.டி.ஐ., தொழில்நுட்ப தேர்வில் டி.என்.பி.எல்., மாணவி சாதனை
ஐ.டி.ஐ., தொழில்நுட்ப தேர்வில் டி.என்.பி.எல்., மாணவி சாதனை
ஐ.டி.ஐ., தொழில்நுட்ப தேர்வில் டி.என்.பி.எல்., மாணவி சாதனை
ADDED : நவ 06, 2024 01:25 AM
கரூர், நவ. 6-
ஐ.டி.ஐ., தொழில்நுட்பத் தேர்வில், அகில இந்திய அளவில் சிறப்பிடம் பிடித்த, புகழூர் டி.என்.பி.எல்., பள்ளி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கரூர் மாவட்டம், புகழூரில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் அறக்கொடை சார்பில், 2014-ம் ஆண்டு முதல் டி.என்.பி.எல்., தொழிற்பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டு, எலக்ட்ரீஷியன், பிட்டர், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், வெல்டர் தொழிற்பிரிவுகளில் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் நடந்த, அகில இந்திய தொழிற்தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் தொழிற்பிரிவில் பயின்ற மாணவி ஸ்ரீதேவி, அகில இந்திய அளவில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார். முதலிடம் பெற்ற மாணவியை, சென்னை தலைமை செயலகத்தில் கடந்த மாதம், 24 ல் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். மேலும் சான்றிதழ் பெற்ற மாணவியை, தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் பொதுமேலாளர் கலைச்செல்வன் பாராட்டு தெரிவித்தார். அப்போது, ஆலை அதிகாரிகள், பணியாளர்கள், ஐ.டி.ஐ., பயிற்றுனர்கள் பங்கேற்றனர்.

