/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மலைக்கோவிலுாரிலிருந்து மூலப்பட்டிக்கு பஸ் இயக்க மாணவர், மக்கள் வேண்டுகோள்
/
மலைக்கோவிலுாரிலிருந்து மூலப்பட்டிக்கு பஸ் இயக்க மாணவர், மக்கள் வேண்டுகோள்
மலைக்கோவிலுாரிலிருந்து மூலப்பட்டிக்கு பஸ் இயக்க மாணவர், மக்கள் வேண்டுகோள்
மலைக்கோவிலுாரிலிருந்து மூலப்பட்டிக்கு பஸ் இயக்க மாணவர், மக்கள் வேண்டுகோள்
ADDED : டிச 16, 2024 04:00 AM
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே உள்ள மலைக்கோவிலுாரில் இருந்து, 6 கி.மீ., தொலைவில் மூலப்பட்டி கிராமம் உள்ளது. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில், மூலப்பட்டி, வடுகநாகம்-பள்ளி, குப்பை மேட்டுப்பட்டி போன்ற சுற்றுவட்டார பகுதி-களை சேர்ந்த கிராமத்திலிருந்து, 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆரம்ப கல்வி பயின்று வருகின்றனர்.
ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே உள்ள இப்பள்ளியில் படித்த மாணவர்கள், 6ம் வகுப்புக்கு, 6 கி.மீ., துாரம் உள்ள மலைக்கோ-விலுார் அரசு மேல்நிலை பள்ளிக்கு செல்ல வேண்டும்.இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை காலை, மாலை என, பள்ளி நேரத்திற்கு அரசு பஸ்கள், மூலப்பட்டி வரை இயக்கப்பட்டது. இதன் மூலம் அந்த பஸ்சில், அப்பகுதி மாண-வர்கள் மற்றும் பொதுமக்கள் சென்று வந்தனர். மேலும், அப்பகு-தியில் இருந்து மலைக்கோவிலுார் சென்று, கரூர் உட்பட வெளியூர் வேலைக்கு சென்று வருபவர்களுக்கும் இந்த பஸ் மிகவும்
பயனுள்ளதாக இருந்தது.ஆனால், கொரோனாவிற்கு பின், 4 ஆண்டுகளாக இந்த பஸ்சும் நிறுத்தப்பட்டது. பேருந்து இல்லா-ததால், தற்போது கிராம மாணவர்கள் தினமும், 6 கி.மீ., வரை நடந்து சென்று பயிலும் அவல நிலை உள்ளது. காலை நேரங்-களில், டூவீலர்களில் வேலைக்கு செல்லும் பலர் இந்த மாண-வர்கள் மீது பரிதாபப்பட்டு, தங்களுடைய வாகனங்களில் அழைத்துச் சென்று பள்ளியில் விடுகின்றனர். ஆனால், மாலை நேரத்தில் வீடு திரும்பும் போது பஸ் இல்லாததால், தினமும், 6 கி.மீ., துாரம் மாணவர்கள் நடந்தே வீட்டுக்கு செல்கின்-றனர்.எனவே, மாணவர்கள் நலன் கருதி நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

