ADDED : ஜூலை 14, 2026 05:42 AM
கரூர்; 'பள்ளிக்கு செல்ல பஸ் வசதி தேவை' என, அரவ-ணாம்பேட்டை பள்ளி மாணவர்கள், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்-டத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
கரூர் மாவட்டம், மணவாசி ஊராட்சி பஞ்.,க்குட்-பட்ட அரவணாம்பேட்டையில் ஏராளமான குடியி-ருப்புகள் உள்ளன. இங்கிருந்து மாணவ, மாண-வியர் பள்ளிக்கு செல்ல நேரடியாக பஸ் வசதி கிடையாது. இதனால், பல கி.மீ., துாரம் நடந்து சென்று பஸ் பிடிக்க வேண்டி உள்ளது. இல்லை-யெனில், தனியார் வாகனம் மூலம் செல்ல அதிக செலவு செய்ய வேண்டி உள்ளது. பள்ளிக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் உள்ளனர். மாலை நேரத்தில் பள்ளி முடிந்து வீட்டுக்கு மாணவ, மாணவியர் அங்கிருந்து நடந்தே வருவதற்கு பெற்றோர் அச்சப்படுகின்றனர்.இதனால், பள்ளிக்கு மாணவர் வருகை, கல்வி ஆகியவை பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரில் இருந்து மேட்டாங்கிணம், கருப்பூர் பகுதி-களில் செயல்படும் பள்ளிகளில் மாணவ, மாண-வியர் அதிகம் சென்று வருகின்றனர். இந்த ஊர் வழியாக பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
