தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கிய தொழிலாளி கைது

டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கிய தொழிலாளி கைது

டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கிய தொழிலாளி கைது


ADDED : ஜூலை 14, 2026 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2026 05:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை; குளித்தலை அடுத்த மேல தாளியாம்பட்டி டாஸ்மாக் கடையில், செந்தில்குமார், 47, விற்ப-னையாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த, 11ல், மேலகுட்டப்பட்டியை சேர்ந்த விவசாய தொழிலாளியான முருகன், 41, டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார். அங்கு, இரண்டு மது பாட்டில்களை கேட்டுள்ளார். அப்போது, அதற்-குண்டான பணத்தை விற்பனையாளர் செந்தில்-குமார் கேட்டுள்ளார். உடனடியாக, ஏ.டி.எம்., கார்டை முருகன் கொடுத்துள்ளார். அதை மிஷினில், 'சுவைப்' செய்து பார்த்தபோது, வங்கி கணக்கில் பணம் இல்லை என, தெரியவந்தது. இதை முருகனிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, கடனாக மது பாட்டில்களை கொடுக்கும்படி கேட்டுள்ளார். அதற்கு செந்தில்-குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்தி-ரமடைந்த முருகன், தகாத வார்த்தையால் திட்டி, கீழே கிடந்த கற்களை எடுத்து விற்பனையாளர் மீது வீசியுள்ளார். இதனால், விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர் ஆகிய இருவரும் கடைக்குள் சென்று, ஷட்டரை இழுத்து மூடிக்-கொண்டு தப்பியுள்ளனர். இதுகுறித்து புகார்படி வழக்குப்பதிவு செய்த லாலாபேட்டை போலீசார், முருகனை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us