/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மத்திய அரசு கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவர்கள் உதவித்தொகை பெற அழைப்பு

ADDED : நவ 21, 2024 01:39 AM
மத்திய அரசு கல்வி நிறுவனத்தில் படிக்கும்
மாணவர்கள் உதவித்தொகை பெற அழைப்பு
கரூர், நவ. 21-
கரூர் கலெக்டர் தங்க வேல் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பட்டியலிட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. கல்வி உதவித்தொகையாக கற்பிப்பு கட்டணம், சிறப்பு கட்டணம், தேர்வு கட்டணம் உள்பட கட்டணங்களுக்காக செலுத்திய தொகை அல்லது ஆண்டிற்கு அதிகபட்சம், 2 லட்சம் ரூபாய் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும். நடப்பு கல்வியாண்டில் புதியது மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றிலும், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலகம் அல்லது https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship_schemes என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பித்தை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். வரும் டிச., 12க்குள் புதுப்பித்தல், 2025 ஜன., 15க்குள் புதிய மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.