/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குண்டும், குழியுமான சாலை மாணவ, மாணவியர் அவதி
/
குண்டும், குழியுமான சாலை மாணவ, மாணவியர் அவதி
ADDED : ஜூலை 15, 2025 01:41 AM
கரூர், கரூர் அருகே, சாலைகள் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
கரூர் மாவட்டம், பழைய ஜெயங்கொண்டம் டவுன் பஞ்சாயத்து, 13 வது வார்டு அழகாபுரியில் இருந்து, கோவில்பட்டி வரை செல்லும் சாலை, பல மாதங்களாக குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அந்த சாலையில் ஏராளமான வீடுகள், விவசாய நிலங்கள் உள்ளன. பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியர், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் டூவீலர்களில் மட்டுமின்றி, நடந்து கூட செல்ல முடியாமல் பெரும் அவதிப்படுகின்றனர்.
எனவே, அழகாபுரி-கோவில்பட்டி சாலையை சீரமைக்க, கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பழைய ஜெயங்கொண்டம் டவுன் பஞ்., நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுப்பது அவசியம்.