/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அனைத்து வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் சப்-கலெக்டரிடம் மனு வழங்கல்
/
அனைத்து வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் சப்-கலெக்டரிடம் மனு வழங்கல்
அனைத்து வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் சப்-கலெக்டரிடம் மனு வழங்கல்
அனைத்து வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் சப்-கலெக்டரிடம் மனு வழங்கல்
ADDED : அக் 17, 2025 01:32 AM
குளித்தலை : தீபாவளி பண்டிகையையொட்டி வெளி பகுதி வியபாரிகள் தரைக்கடை அமைப்பதை தடுக்க கோரி, குளித்தலை நகர அனைத்து வியாபாரிகள் சங்க பேரவை தலைவர் ராஜகோபால், செயலாளர் சதக் அப்துல்லா, பொருளாளர் வினோத் தலைமையில் வியாபாரிகள், நேற்று குளித்தலை சப்-கலெக்டர் சுவாதிஸ்ரீயிடம் புகார் மனுஅளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது:
நாங்கள் சட்ட திட்டங்களை பேணிகாத்து, ஆண்டுதோறும் கடைகளுக்கு வரி, அட்வான்ஸ், ஜி.எஸ்.டி., மற்றும் தொழில் வரி கட்டியும், இதற்கு மேல் தொழில் செய்ய முதலீடு செய்தும் வருகிறோம். தற்போது வழியில் கடைகளை வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகளால், சுணக்கம் ஏற்பட்டுள்ளது. எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட, தரைக்கடை வியாபாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.
இவர்கள் தரமற்ற பொருள்கள், பட்டாசுகளை விற்பனை செய்வதால், அரசு விதி
முறைகளுக்கு உட்பட்டு கடைகள் நடத்தும் எங்களை போன்ற வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. ஆண்டுதோறும் ஒரே இடத்தில், பல இன்னல்களை சமாளித்து வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் எங்களுக்கு, தரைக்கடை வியாபாரிகள் மூலம் பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே, தரைக்கடை வியாபாரிகளுக்கு தனியாக நகர எல்லையில் அல்லது ஓரத்தில் கடைகள் நடத்திடவும், கடைவீதி மற்றும் கடைகள் அதிகம் உள்ள பகுதிகளில் தரைக்கடை
கள் நடத்த அனுமதிக்கக் கூடாது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.