/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் நகரில் நேற்றிரவு திடீர் மழையால் மகிழ்ச்சி
/
கரூர் நகரில் நேற்றிரவு திடீர் மழையால் மகிழ்ச்சி
ADDED : ஆக 15, 2024 01:39 AM
கரூர், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்றிரவு திடீரென மழை பெய்தது.
கரூர் மாவட்டத்தில் கடந்த, 10 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந் நிலையில் கடந்த, மூன்று நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
நேற்று காலை கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. அதை தொடர்ந்து, வானம் மேக மூட்டமாக இருந்தது.
நேற்று இரவு, 7:30 முதல், 8:00 மணி வரை கரூர் டவுன், தொழிற்பேட்டை, பசுபதிபாளையம், வெங்கமேடு, சுங்ககேட், தான்தோன்றிமலை, ஆண்டாங்கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் திடீரென மழை பெய்தது.
இதனால், கரூர் நகர பகுதிகளில் இரவு நேரத்தில் குளிர்ந்த காற்று வீசியது.