ADDED : ஜூலை 13, 2026 04:28 AM

அ நிறம் | அளவு
கரூர்:கரூர் அருகே, நிழற்கூடத்தை பராமரிக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர்-கோவை சாலை, கோவிந்தம்பாளையத்தில் பல ஆண்டுகளுக்கு முன், நிழற்கூடம் கட்டப்பட்டது. அதை, கோவிந்தம்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, கரூர் டவுன் பகுதிகளுக்கு, பஸ்களில் செல்லும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால், சரியான பராமரிப்பு இல்லாததால், நிழற்கூடத்தை சுற்றி புற்கள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கரூரில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், பயணிகள் நிழற்கூடத்தை உடனடியாக பராமரிக்க வேண்டும் என, கரூர் மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
