/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இரவு நேரத்தில் பஸ்கள் நிற்காமல் செல்வதால் அவதி
/
இரவு நேரத்தில் பஸ்கள் நிற்காமல் செல்வதால் அவதி
ADDED : அக் 30, 2024 11:46 PM
கரூர்:க.பரமத்தியில், இரவு நேரத்தில் பஸ்கள் நிற்காமல் செல்வதால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
க.பரமத்தி
பஸ் நிறுத்தம், கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இப்பகுதி
மக்கள் பல்வேறு பணிகளுக்காக தினமும் கரூர், கோவை, திருப்பூர்
நகரங்களுக்கு சென்று வருகின்றனர். இந்த வழியாக செல்லும் அரசு மற்றும்
தனியார் பஸ்கள், பகல் நேரங்களில் நின்று செல்கின்றன.
இரவு, 10:00
மணிக்கு மேல் காலை, 6:00 மணி வரை செல்லும் அரசு பஸ்கள் க.பரமத்தியில்
நிற்பதில்லை. இரவு நேரங்களில் வேறு பஸ்கள் இல்லாததால், பயணிகள்
தவிக்கின்றனர். எனவே அரசு பஸ்களை, க.பரமத்தி நிறுத்தத்தில் நின்று
செல்ல டிரைவர், கண்டக்டருக்கு, போக்குவரத்து அதிகாரிகள்
அறிவுறுத்த வேண்டும் என, பயணிகள் வலியுறுத்துகின்றனர்.