/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நெடுஞ்சாலையில் மண் அரிப்பால் தவிப்பு
/
நெடுஞ்சாலையில் மண் அரிப்பால் தவிப்பு
ADDED : செப் 12, 2024 07:36 AM
கிருஷ்ணராயபுரம்: கட்டாரிப்பட்டி நெடுஞ்சாலையில், மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, பாப்பகாப்பட்டி முதல் பஞ்சப்பட்டி வரை நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக தினமும் பஸ், லாரி மற்றும் இதர வாகனங்களில் மக்கள் பயணம் செய்து வருகின்றனர். இதில் கட்டாரிப்பட்டி அருகில், நெடுஞ்சாலையோரம் பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு பெரிய பள்ளமாக மாறி விட்டது. இதனால் சாலை வழியாக செல்லும் வாக-னங்கள், தடுமாறி பள்ளத்தில் விழும நிலை ஏற்-பட்டுள்ளது. எனவே, சாலையோரம் மண் அரிப்பு ஏற்பட்டுள்ள இடத்தில், தற்காலிகமாக மண் கொட்டி சரி செய்து விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில், நெடுஞ்சாலைத்துறை நட-வடிக்கை எடுக்க வேண்டும்.